மீண்டும் சர்ச்சையில் 'நுங்கு' புகழ் ஷர்மிகா..வீடியோக்களை பார்த்ததால் விபரீதம்.. பரபரப்பை கிளப்பிய 2 பேர் - என்ன செய்ய போகிறார்.?

x
  • சித்த மருத்தவர் ஷர்மிகா சொன்ன ஹெல்த் டிப்ஸ் வீடியோக்களை பார்த்து அதை பின்பற்றியதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக 2 புகார்கள் வந்திருப்பது ஷர்மிகாவை மீண்டும் சிக்கலுக்கு ஆளாக்கியிருக்கிறது...
  • குலோப்ஜாமூன், நுங்கு என சொன்னாலே ஷர்மிகா சொன்னதுல்ல இது.. என இணையவாசிகள் வரிந்து கட்டிக் கொண்டு வரும் அளவுக்கு ஹெல்த் டிப்ஸ்களை அள்ளி தெளித்து பிரபலமானவர் ஷர்மிகா..
  • சித்த மருத்துவர் தான் என்ற போதிலும் அழகு குறிப்பு தொடங்கி கர்ப்பம் தரிப்பது வரை அவர் சொன்ன டிப்ஸ்களை தாண்டி அவருக்கென கிளம்பிய ரசிகர்கள் ஏராளம்..
  • யூட்யூப் சேனல், இன்ஸ்டாகிராம் என எந்த பக்கம் சென்றாலும் சிரித்த முகமாக டிப்ஸ் சொல்லும் ஷர்மிகாவை நிச்சயம் பார்க்காமல் கடந்து போகவே முடியாது...
  • திடீரென அவர் சொன்னதெல்லாம் சித்த மருத்துவத்திற்கு எதிரானது என கிளம்பியவர்களால் சர்ச்சையில் சிக்கினார் ஷர்மிகா..
  • அவர் சொல்வதெல்லாம் உண்மையே இல்லை.. வாய்க்கு வந்ததை எல்லாம் உருட்டோ உருட்டென உருட்டுகிறார் என ஷர்மிகாவுக்கு எதிராக கொடி பிடித்தனர் மற்றொரு தரப்பு...
  • இதனிடையே நான் சொன்னதுல சிலதுலாம் ஃப்ளோவில வந்துடுச்சு.. மன்னிச்சுடுங்க என வீடியோ வெளியிட்டார் ஷர்மிகா..
  • ஆனாலும் ஷர்மிகாவை விசாரணை, ஆணையம், விளக்க கடிதம் என அலைக்கழித்தார்கள்... இதை எல்லாம் எதிர்கொண்ட ஷர்மிகா, திடீரென நகை, புடவை விளம்பர மாடல் போல திடீரென கண்கவர் வீடியோக்களை பதிவிட்டு வேற லெவல் என்ட்ரி கொடுத்தார்...
  • டிப்ஸ் சொன்னாதானே வம்பு.. இப்ப பாருங்க என சொல்லும் விதமாக அவர் வெளியிட்ட வீடியோக்களும் லைக்ஸ் அள்ளின..
  • இந்த சூழலில் ஷர்மிகாவின் வீடியோக்களை பார்த்து தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறி மீண்டும் கிளம்பியிருக்கிறது மற்றொரு சர்ச்சை...
  • இந்திய மருத்துவ ஆணையரகத்தில் 2 புகார்கள் பதிவாகி இருக்கும் நிலையில் அவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தப்பட உள்ளது. அதேநேரம் புகாரின் உண்மை தன்மை குறித்தும் அவர்களிடம் விசாரிக்கப்பட உள்ளது..
  • ஏற்கனவே 2 கட்டமாக ஷர்மிகாவிடம் விசாரணை நடத்தியிருக்கும் நிலையில் இந்த புகாரில் முகாந்திரம் உள்ளதா? என்பது குறித்தும் தெரிந்து கொண்ட பிறகே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது..
  • இதற்கெல்லாம் ஷர்மிகா என்ன சொல்லப் போகிறார்? இப்போது வந்திருக்கும் புகார்களின் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மை என்ன? விசாரணைக்கு பின்னரே தெரியவரும்...

Next Story

மேலும் செய்திகள்