அணு ஆயுதம் - அமெரிக்கா எச்சரிக்கை | nuclearweapon | america | russiaukrainewar

x

அணு ஆயுதம் - அமெரிக்கா எச்சரிக்கை

அணு ஆயுதத்தைப் பயன்படுத்த ரஷ்யா தயாராகி வருவதற்கான ஆதாரங்கள் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ரஷ்யா அணுகுண்டைப் பயன்படுத்தத் தயாராகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் கூறியுள்ளார். உக்ரைன் கதிர்வீச்சுக்களை வெளிப்படுத்தும் டர்ட்டி பாம்ப் எனப்படும் "அணுக்கழிவு குண்டுகளை" பயன்படுத்த உள்ளதாக ரஷ்யா தெரிவித்திருந்தது. இந்நிலையில், அமெரிக்காவும் மற்ற மேற்கத்திய நாடுகளும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனில் போர் நடவடிக்கையை அதிகரிக்க சதி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளன. இதையடுத்து ரஷ்யா உக்ரைனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால் அதன் மூலம் ஏற்படும் கடும் பின்விளைவுகளால் உக்ரைன் அணுக்கழிவு குண்டுகளைப் பயன்படுத்தும் கட்டாயத்திற்குத் தள்ளப்படும் என்று கரீன் ஜீன் பியர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தகக்து.


Next Story

மேலும் செய்திகள்