"ஒரு வாட்டி குடுத்து பாருங்க".. "மிச்சத்த நான் கவனிச்சிக்கிறேன்.." - அதிரவைத்த விசில் சத்தம்...

x

விவசாயி சின்னத்தில் ஒரு முறை கை வை, மற்றதை தான் பார்த்துக்கொள்வதாக சீமான் கூறியதால் நாம் தமிழர் கட்சியினர் உற்சாக குரல் எழுப்பினர்.

குன்றத்தூர் - பல்லாவரம் சாலை விரிவாக்க பணிக்காக குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கரைமாநகர் பகுதியில் சாலையோரம் உள்ள குடியிருப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதி மக்களை நாம் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போதும், மூதாட்டி ஒருவரை அணைத்து ஆறுதல் கூறிய சீமான், விவசாயி சின்னத்தில் ஒருமுறை கை வை என்றும் மற்றதை தாம் பார்த்துக் கொள்வதாகவும் கூறினார். அ ப்போது கட்சியினர் உற்சாக குரல் எழுப்பி, ஆரவாரம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்