அமைச்சரிடம் கேள்வியெழுப்பிய நாதக பிரமுகர்.. கூட்டத்திலிருந்து வெளியேற்றிய போலீசார் - திடீர் பரபரப்பு

x

கன்னியாகுமரி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலிருந்து, அமைச்சர் மனோதங்கராஜிடம் கேள்வியெழுப்பிய நாம் தமிழர் கட்சி பிரமுகர் வெளியேற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அருவிக்கரை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், அமைச்சர் மனோதங்கராஜ் பங்கேற்றார். அப்போது சட்டமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பாக பத்பநாபபுரம் தொகுதியில் போட்டியிட்ட சீலன் என்பவர், கனிமவளங்கள் கடத்தல் தொடர்பாக மனோ தங்கராஜிடம் கேள்வியெழுப்பினார். அப்போது மனோ தங்கராஜ், அருவிக்கரை ஊராட்சியில் உள்ளவர்கள் மட்டுமே கேள்வி கேட்க வேண்டுமென கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் சீலனை வெளியேற்றினர்


Next Story

மேலும் செய்திகள்