"இப்போ எப்படி ஜிஎஸ்டி போடுவீங்க.."அரிசி ஆலைகள் போட்ட மாஸ்டர் பிளான் - எஸ்கேப்.. கிரேட் எஸ்கேப்..!
25 கிலோவுக்குள் பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களுக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதால், அரிசி மூட்டைகளை 26 கிலோவாக ஆலைகள் மாற்றியமைத்து வருகின்றன.
நாடு முழுவதும், 25 கிலோவுக்குள் பீரி-பேக்கேஜ் செய்யப்பட்டுள்ள பால், தயிர், அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களுக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 25 கிலோவிற்கு மேல் பீரி-பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களுக்கு வரி விதிப்பு என்பது இல்லை என ஜிஎஸ்டி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.
இதனால், ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து தப்பிக்க, தமிழகத்தில் உள்ள அரிசி ஆலைகள் புது முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஏற்கனவே நடைமுறையில் இருந்த 25 கிலோ மூட்டைகளை, 26 கிலோவாக மாற்றியமைத்து வருகின்றன.
இதன்மூலம், வரி விதிப்பை தவிர்க்க முடியும் என்கின்றனர். அதே நேரத்தில், 5 மற்றும் 10 கிலோ அரிசி பாக்கேட்டுகளுக்கு, 5 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
