"முயன்றால் முடியாதது எதுவும் இல்லை"... ‘சச்சினின்' நீண்ட கால சாதனையை தகர்த்த விராட் கோலி

x

டெல்லி டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் பேட் செய்த இந்திய வீரர் விராட் கோலி, சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 25 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார். தனது 549வது இன்னிங்சில் இந்த சாதனையை படைத்துள்ள கோலி, சர்வதேச அளவில் 6-வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 2வது இன்னிங்சில் 42 ரன்களை கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா, டெஸ்ட் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். இதுதவிர டெஸ்ட் போட்டிகளில் முதன்முறையாக, விராட் கோலி ஸ்டம்ப் அவுட் முறையிலும், ரோகித் சர்மா ரன் அவுட் முறையிலும் ஆட்டமிழந்து, விசித்திர சாதனையையும் படைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்