"முழு திருப்தி இல்லை" - டி.கே.சிவக்குமாரின் சகோதரர் அதிர்ச்சி பேட்டி

x

கர்நாடக துணைமுதல்வராக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கட்சி தலைமையின் முடிவை ஏற்பதில் என்ன தவறு என சிவக்குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலை சந்திக்க அவரது இல்லத்திற்கு வந்த போது இவ்வாறு கூறினார். இதனிடையே, பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமாரின் சகோதரரும், காங்கிரஸ் எம்.பியுமான சுரேஷ், இதில் தங்களுக்கு முழு திருப்தி இல்லை என்றும், கர்நாடகா மக்களின் நலன் கருதி இம்முடிவை ஏற்பதாகவும் கூறினார். மேலும், வரும் காலங்களில் டி.கே.சிவக்குமாருக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.-


Next Story

மேலும் செய்திகள்