வடக்கு மண்டல ஐஜி நேரில் ஆய்வு... "கொள்ளையடித்தது வடமாநிலத்தவர்கள் தான்" - வடக்கு மண்டல ஐஜி ஆய்வு

x

திருவண்ணாமலையில் கொள்ளை நடைபெற்ற ஏடிஎம் மையங்களில், வடக்கு மண்டல ஐஜி கண்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ரமேஷ் கண்ணா ஆகியோருடன் வடக்கு மண்டல ஐஜி கண்ணன், தேனிமலை மற்றும் மாரியம்மன் கோவில் தெரு பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களில், நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொள்ளையர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்