அமெரிக்கா மீது அணுகுண்டு வீசுவோம் - வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் எச்சரிக்கை

x

அமெ ரிக்கா மீது அணு குண்டு வீசுவோம் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தென் கொரியாவையும், அதன் தோழமை நாடான அமெரிக்காவையும் பல ஆண்டுகளாக வட கொரியா அச்சுறுத்தி வருகிறது. வெள்ளியன்று மிக சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை வட கொரியா சோதனை செய்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணை 15,000 கிலோ மீட்டர் வரை பயணம் செய்து அமெரிக்காவை எட்டும் திறன் கொண்டது என்று ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் யசுகசு ஹமடா கூறியுள்ளார். இதைப் பற்றி ஜப்பான், தென் கொரியா மற்றும் ஜப்பான் எழுப்பிய புகார்களின் அடிப்படையில் ஐ.நா சபையின் பாதுகாப்பு அவை திங்கள் அன்று இதைப் பற்றி விவாதிக்க உள்ளது. இந்நிலையில், வட கொரியாவை அமெரிக்கா அச்சுறுத்துவது தொடர்ந்தால், அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று கிம் ஜாங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீப மாதங்களில் ஏவுகணை சோதனைகளை வட கொரியா அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்