உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய வடகொரியா - சிறிது நேரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

x

வடகொரியாவின் முதல் ராணுவ உளவு செயற்கைக்கோள் கடலில் விழுந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கூறியபடி வடகொரியா இன்று தனது உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது.

ஆனால் சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது கடலில் விழுந்துள்ளது.

வடகொரியாவுக்கென்று விண்ணில் இதுவரை எந்த விதமான செயல்படும் செயற்கைக் கோளும் கிடையாது.

இதையடுத்து முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை வடகொரியா உருவாக்கியது.

வட ஃபியோங்கன் மாகாணத்தில் உள்ள சோஹே செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து "Chollima-1" ராக்கெட்டில் பொருத்தப்பட்ட "Malligyong-1" என்ற உளவு செயற்கைக் கோள் காலை 6.27 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

ஆனால் தொழில்நுட்பக் கோளாறால் அது கடலில் விழுந்த நிலையில், தவறுகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு விரைவில் 2வது முறை விண்ணில் ஏவப்படும் என வடகொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐநாவின் கட்டுப்பாட்டை மீறி வடகொரியா உளவு செயற்கைக் கோளை ஏவுவதாக தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டித்து வந்த நிலையில், வடகொரியாவின் முயற்சி தோல்வியில் முடிந்ததால் அவை சற்று நிம்மதி அடைந்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்