மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா - ஜப்பான் - தென் கொரியா கடும் கண்டனம்

x

இந்த ஆண்டு முழுவதும் தனது தொடர் ஏவுகணை சோதனைகளால் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பட்டு விட கூடாது என அச்சும் அளவிற்கு தனது அண்டை நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பானை மிரட்டி வருகிறது,வட கொரியா.

இந்நிலையில், இந்த மாதத்திற்கான முதல் ஏவுகணை சோதனையை நடத்தியிருக்கிறது, வட கொரியா.

சுமார் 50 நிமிட இடைவெளியில் இரண்டு ஏவுகணைகளின் சோதனை நடத்தப்பட்டதாகவும், அவை கொரிய தீபகற்பம் மற்றும் ஜப்பானுக்கு இடையே உள்ள கடல் பகுதியில் விழுந்ததாகவும் தென் கொரியா மற்றும் ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்