லாரி சாவியை பிடுங்கிய பெண் அதிகாரியை சரமாரியாக தாக்கிய வடமாநில டிரைவர் - திண்டுக்கல்லில் அதிர்ச்சி

x
  • திண்டுக்கல் மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்க சென்ற சுங்கத்துறை பெண் அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மலைப் பகுதிகளில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
  • இந்த பணியில் ஈடுபட்டு வரும் நிறுவனம், அருகில் உள்ள கிராமங்களில் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
  • இதன் அடிப்படையில், மதுரை நத்தம் சாலையில் மணல் அள்ளிக்கொண்டு வந்த லாரியை சுங்கத்துறை உதவி இயக்குனர் மாரியம்மாள் மடக்கி பிடித்து லாரியின் சாவியை பறிமுதல் செய்துள்ளார்.
  • அப்போது, அங்கு வந்த சிலர் பெண் அதிகாரியுடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
  • இதையடுத்து, பொதுமக்கள் உதவியுடன் லாரியை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
  • இதனிடையே, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சகிந்தர் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்து தப்பிச்சென்ற மூவரை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்