ஏமாற்றிய வடகிழக்கு பருவமழை... மடமடவென சரிந்த வைகை அணை நீர் இருப்பு

x

வைகை அணையின் நீர் இருப்பு 45 சதவீதமாக சரிந்துள்ளதால், அணையிலுள்ள நீரை குடிநீர் தேவைக்கு மட்டும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழைப்பொழிவு வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் குறைவாக இருந்தது. அதேவேளையில் பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் அணையிலிருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர் இருப்பு 45 சதவீதமாக சரிந்துள்ளது. இதனையடுத்து அணையில் மீதமுள்ள நீரை, குடிநீர் தேவைக்கு மட்டும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்