"தென்மேற்கு பருவ காலத்தில் இயல்பான மழை பொழிவு" - இந்திய வானிலை ஆய்வு மையம்

x

தென்மேற்கு பருவ காலத்தில் இயல்பான மழை பொழிவு இருக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மைய பொது இயக்குனர் மிருத்யுஞ்செய் மஹோபாத்ரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 96 சதவீத மழை பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தீபகற்ப இந்தியா, கிழக்கு மத்திய இந்தியாவை ஒட்டியுள்ள பகுதிகள், வடகிழக்கு இந்தியா, வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் இயல்பான மழை பொழிவு இருக்கும் என குறிப்பிட்டார்.

வடமேற்கு இந்தியா, மேற்கு மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் இயல்பானது முதல் மிதமானது வரை மழைபொழிவு இருக்கும் என மிருத்யுஞ்செய் மஹோபாத்ரா தெரிவித்தார். பருவமழை காலத்தில் எல் நினோ நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்ட அவர், அதன் தாக்கம் பருவ காலத்தில் இரண்டாவது பிற்பகுதியில் காணப்படலாம் என தெரிவித்தார்.https://youtu.be/MrauEWTwnh0


Next Story

மேலும் செய்திகள்