ஆண்களுக்கு மட்டுமே அசைவ விருந்து... மதுரையில் நடந்த விநோத திருவிழா!

x

மதுரை திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத அசைவ திருவிழாவில் 10 ஆயிரம் பேருக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது.


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரும்பாறை முத்தையா கோவிலில், ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத அசைவ விருந்து திருவிழா நடைபெற்றது. நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 60 ஆடுகளை பலியிட்டு, சாதத்தை மலைபோல் குவித்து, முத்தையா சாமிக்கு படையல் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்பு சுமார் 10 ஆயிரம் ஆண்களுக்கு இலை போட்டு கறி விருந்து பரிமாறப்பட்டது. இந்த அசைவ விருந்தில் திருமங்கலம், கரடிக்கல், செக்காணூரணி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்