"NO Reel Game..Only Real Game" - இளைஞர்களுக்கு அட்வைஸ் சொன்ன எவரெஸ்ட் ராஜசேகர்

x

அண்மையில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த ராஜசேகர் பச்சை என்பவர், தனது பயண அனுபவங்களை, சென்னையில் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது மலையேற்ற பயிற்சிக்கு உதவி செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு வீடியோ பதிவு மூலம் நன்றி தெரிவித்தார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு முன்பு சென்னை திரிசூலம் மலை, வெள்ளையங்கிரி மலை, மணாலி மலை ஆகியவற்றில் ஏறி பயிற்சி எடுத்துக் கொண்டதாக அவர் கூறினார். ஏழு கண்டங்களில் உள்ள மிகப் பெரிய மலைச் சிகரங்களில் ஏற வேண்டும் என்பது தனது எதிர்கால இலக்கு என்று கூறிய அவர், அதற்கு அரசு உதவி புரிய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். சாதிக்க நினைக்கும் வருங்கால தலைமுறையினர் தொலைபேசியில் ரீல்ஸ் கேம்களை விளையாடுவதை தவிர்த்து விட்டு ரியல் கேம்களை விளையாட வேண்டும் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்