"குழாயில் எண்ணெய் எடுத்து செல்லக் கூடாது" - CPCL ஆலை நிர்வாகத்திற்கு ஆட்சியர் உத்தரவு

x

மறு உத்தரவு வரும் வரை குழாயில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் பணியில் CPCL ஆலை நிர்வாகம் ஈடுபட கூடாது என்று நாகை ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்..நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் மிதந்து சுற்றுச்சூழல் மாசடைந்தது. குழாயின் துளையை சிபிசிஎல் நிர்வாகம் நேற்று இரவு மீண்டும் சீரமைத்தது. இந்நிலையில், கச்சா எண்ணெய் குழாயை அகற்றக்கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் 4வது நாளாக ஈடுபட்டு வரும் நாகூர் பட்டினச்சேரி மீனவர்களை ஆட்சியர் அருண் தம்புராஜ் இன்று நேரில் சந்தித்து, மீனவர்கள் மீண்டும் மீன் பிடிக்க செல்ல வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மீனவர்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்று கேட்டுக் கொண்டார்...


Next Story

மேலும் செய்திகள்