"புதிய ரேஷன் கடை அமைக்க கூடாது" - அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் - பூந்தமல்லியில் பரபரப்பு

பூந்தமல்லி அருகே, புதிய ரேஷன் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பூந்தமல்லி அகரமேல் ஊராட்சியில் உள்ள பழைய ரேஷன் கடையை அகற்றிவிட்டு, புதிய ரேஷன் கடை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்நிலையில், புதிய ரேஷன் கடை அமைக்க அதிகாரிகள் தேர்வு செய்த இடம், தனி நபருக்கு சொந்தமான இடம் என குற்றச்சாட்டு எழுந்த‌து. இந்நிலையில், நில அளவைக்கு வந்த அதிகாரிகளுடன் பெண்கள் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com