"பாஜக-வுக்கு வாக்களிக்க வேண்டிய அவசியமில்லை" - பிஜேபி மூத்த தலைவர் கருத்தால் சர்ச்சை..

x

பாஜகவுக்கு வாக்களிக்குமாறு சொல்லமாட்டேன் எனப் பேசி, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார், அந்தக் கட்சியின் மூத்த தலைவர் உமாபாரதி.

மத்தியபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், அதற்கான வேலைகளில் பாஜக மும்முரமாக இறங்கிவிட்டது.

இதில் ஒரு அங்கமாக, மத்தியப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் மத்திய அமைச்சருமான உமாபாரதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

மாநிலத் தலைநகர் போபாலில் அண்மையில் நடைபெற்ற இளைஞர்களின் தேர்வு சம்மேளனம் எனும் அமைப்பின் நிகழ்ச்சியில் உமாபாரதி பேசியது, பல தரப்பினரையும் கவனத்தில் ஈர்த்துள்ளது.

லோதி எனப்படும் சமூகத்தினர் திரண்டிருந்த அந்தக் கூட்டத்தில், பாஜகவின் படைவீரர் என்கிறமுறையில் பாஜகவுக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்பேன் என்றும்,அதே சமயம், லோதி சமூகத்தினரை அப்படி வாக்களிக்கும்படி சொல்லமாட்டேன் என்று உமாபாரதி குறிப்பிட்டார்.

பந்தல்கண்ட், குவாலியர், சம்பல் வட்டாரத்தில் தீர்மானிக்கும் சக்தியாக லோதி சமூகத்தினர் இருக்கும்நிலையில், 29 எம்.பி. தொகுதிகளில் 13 தொகுதிகளில் இந்த சமூகத்தினரின் வாக்குகள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்தப் பின்னணியில் லோதி சமூகத்தைச் சேர்ந்த பிரீத்தம் லோத்தி எனும் முக்கிய நிர்வாகி, கடந்த ஆகஸ்ட்டில் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டது, அந்த சமூகத்தினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதே சமூகத்தவரான உமாபாரதியின் பேச்சு, அதிருப்தியைச் சமாளிக்கவா என்றும் கேள்வி எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்