"இனி 'இந்தியா' இல்லை 'பாரத்' தான் சரி".. - அசாம் முதலமைச்சர் ஹிமந்தா ட்வீட்

x

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர் என தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள ஓர் அணியில் திரண்டு உள்ள எதிர்க்கட்சிகள், தங்கள் கூட்டணிக்கு 'இந்தியா' என பெயர் வைத்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அசாம் முதலமைச்சர் ஹிமந்தா, இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர் என்றும்... காலனித்துவ மரபுகளில் இருந்து தேசத்தை விடுவிக்க போராட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதோடு நம் முன்னோர்கள் பாரதத்திற்காக போராடினார்கள் என தெரிவித்துள்ள அவர், பாஜக பாரதத்திற்காக போராடும் என கூறுயிருக்கிறார். மேலும் தனது ட்விட்டர் முகப்பு பக்கத்தில், 'அசாம் முதலமைச்சர், இந்தியா' என்பதற்கு பதிலாக 'அசாம் முதலமைச்சர், பாரத்' என அவர் மாற்றம் செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்