"சென்னைக்குள் இனி பள்ளம் தோண்ட கூடாது" மாநகராட்சி அதிரடி தடை

x

சென்னையில் சீரமைக்கப்படும் சாலைகளில், ஒரு வருடத்திற்கு பள்ளம் தோண்டுவதற்கு சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது.

சென்னையில் 58 பேருந்து தடங்களில், சாலைகளுக்கு புதிதாக தார் போடப்பட்டு, சீரமடைக்கப்படும் பணிகள், 49.32 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகின்றன. 16 சாலைகளில் இந்த பணிகள் நிறைவடைந்துள்ளன. ஆயிரத்து 382 உள் சாலைகளை சீரமைக்க 137 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 26 சாலைகள், பேருந்துகள் செல்லும் சாலைகள் ஆகும். சீரமைக்கப்படும்

சாலைகளில், மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறையினர், பணி நிமித்தமாக பள்ளம் தோண்டுவதாக ஏரளமான புகர்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், புதிதாக தார் போடப்படும் சாலைகளில், அடுத்த ஒரு வருடத்திற்கு எந்த ஒரு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பள்ளம்

தோண்டக் கூடாது என்று சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர். சென்னை குடிநீர் விநியோக வாரியம், மின்சார வாரியம் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும், இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்