"என்ன ஆனாலும் அந்த நம்பர நம்பாதீங்க" அப்புறம் மொத்த பணமும் காலியாகிடும்-மக்களுக்கு போலீஸ் கடைசி எச்சரிக்கை

x

பொது மக்களின் செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பும் சைபர் குற்றவாளிகள், நீங்கள் செலுத்திய மின் கட்டணம் கணினியில் பதிவாகவில்லை என்றும், உடனே மின்வாரிய அதிகாரியை தொடர்பு கொள்ளுமாறு மொபைல் எண்ணை அனுப்புவார்கள் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

இந்த போலி தகவலை உண்மை என்று எண்ணி, அந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளும் பொது மக்களின் போனை, ரிமோட் அக்சஸ் செயலி மூலம் சைபர் குற்றவாளிகள் எளிதாக பார்க்க முடியும் என்றும்,

இதன்மூலம் பொதுமக்கள் வங்கி தகவல்களை பயன்படுத்தி, பணத்தை குற்றவாளிகள் திருடமுடியும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், மோசடி கும்பல் ரிமோட் செயலிகளை பயன்படுத்துவதால், பண பரிமாற்றம் நடைபெறும் போது, பொதுமக்களின் மொபைல் எண்ணிற்கு வரும் OTP-களையும் எளிதில் அவர்களால் கண்டறிய முடியும் என்பதால்,

பொதுமக்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என வரும் போலியான தகவலை நம்பி ஏமாற வேண்டாம் என்றும்,

மின்வாரியத்திலிருந்து இது போன்ற குறுந்தகவல்களோ, செல்போன் அழைப்புகளோ வராது என்பதால், பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்