"அதிகாரிகளுக்கு ஊதியம் கொடுக்க கூட நிதி இல்லை" - புலம்பும் உள்ளாட்சி அமைப்புகள்

x

கேரளாவில் தெரு நாய்களை கட்டுப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் பணமின்றி தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்தும் விரைவு செயல திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, விரைவு திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதியை உள்ளாட்சி அமைப்புகளே ஏற்படுத்தி கொள்ள வேண்டுமென அரசு தெரிவித்ததால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பணிகளுக்கு செலவழித்த பணத்தை அரசு இதுவரை வழங்கவில்லை என்ற உள்ளாட்சி அமைப்புகள், தெருநாயை பிடித்து காப்பகத்திற்கு கொண்டு வர 600 ரூபாய் வரை செலவாகும் என்றும், அதற்கான தொகை இல்லை என்றும் கூறியுள்ளன.

மேலும் அதிகாரிகளுக்கு ஊதியம் கொடுக்க கூட நிதி இல்லை என கைவிரித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்