போதிய கட்டிட வசதி இல்லாத அரசு பள்ளி... மாணவர்கள் மரத்தடியில் பாடம் படிக்கும் அவலம்

x

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே போதிய கட்டிட வசதி இல்லாததால், பள்ளி மாணவர்கள் மரத்தடியில் பாடம் படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை அருகே துவரங்குறிச்சி கிராமத்தில்அமைந்துள்ள இந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள், கடந்த 15 ஆண்டுகளாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வில்100 சதவீதம் தேர்ச்சி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், உயர்நிலைப் பள்ளியாக இருந்தபோதே நான்கு கட்டிடங்கள் போதாத சூழலில், தற்போது மேல்நிலைப்பள்ளியாக இயங்கி வருகிறது.

இந்நிலையில், வகுப்பறை பற்றாக்குறையால் ஆசிரியர்கள் மாணவர்களை மரத்தடியில் உட்காரவைத்து, பாடம் நடத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்