"உள்ளூர் இளைஞர்கள், நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை" - என்.எல்.சி இயக்குநரிடம் அண்ணாமலை வலியுறுத்தல்

x
  • நெய்வேலியில் நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என என்.எல்.சி இயக்குநரிடம் வலியுறுத்தியதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
  • டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், என்.எல்.சி தனி இயக்குநர் சுப்ரதா சவுத்ரியை சந்தித்து பேசியதாக தெரிவித்துள்ளார்.
  • உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, குறைந்தபட்சம் மேற்பார்வையாளர் வரையிலாவது நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறியுள்ளார்.
  • மேலும் நிலம் கொடுத்தவர்களுக்கு 'வீட்டுக்கு ஒரு வேலை' என்ற வாக்குறுதியை உடனடியாக நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும் என்றும், புதிதாக நிலம் கையகப்படுத்தும் போது, உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
  • கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்வதாக சவுத்ரி உறுதி அளித்த்தாக அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்