5 நிமிடத்தில்18 செய்திகள்... இரவு தந்தி செய்திகள் | Thanthi Night News | Speed News (04.04.2023)

x
  • ஐபிஎல் டி20 தொடரின் இன்றையப் போட்டியில் டெல்லி, குஜராத் அணிகள் மோதவுள்ளன. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, நடப்பு தொடரின் முதல் போட்டியில் சென்னையை வீழ்த்தியது. அதே சமயம் முதல் போட்டியில் லக்னோவிடம் தோல்வியைத் தழுவிய டெல்லி, முதல் வெற்றியை பதிவு செய்ய முயற்சிக்கக் கூடும் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


  • கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட உத்தரப்பிரதேச இளைஞரை கேரள தனிப்படை போலீசார் விடுவித்தனர். புலந்சாகர் பகுதியில் வைத்து ஒருவரை போஒலீசார் பிடித்து கைது செய்ததாக தகவல் வெளியான நிலையில், விசாரணையில் அவருக்கு தொடர்பு இல்லை என தெரிய வந்ததை அடுத்து விடுவித்தனர்.


  • உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ்(Unnao) பகுதியில் மூத்த வழக்கறிஞர் ஒருவர் தனது ஜூனியரை நீதிமன்றத்தில் வைத்து காலணியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...


  • மதுரை மத்திய சிறையில் பெண் கைதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆண் சிறை கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது


Next Story

மேலும் செய்திகள்