இன்றைய தலைப்பு செய்திகள் (13-10-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

7வது நாளாக தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்..வடக்கு காசா பகுதியில் தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல் ராணுவம்....உடனடியாக அனைத்து பாலஸ்தீனியர்களும் வெளியேற இன்று எச்சரிக்கை...

இஸ்ரேல் தாக்குதல் காரணமாக 4 லட்சம் பாலஸ்தீனியர்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்...

மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நிச்சயம் இடம் மாற்றம் செய்ய முடியாது என பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தகவல்...

பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் உடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சந்திப்பு...போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பிற இஸ்லாமிய நாடுகளுக்கு பயணம் செய்யவும் திட்டம்...போரை இருநாடுகளும் நிறுத்த வேண்டும் என ரஷ்ய அதிபர் புதின் இன்று வேண்டுகோள்..

மோதல்கள் நிறைந்த உலகம் யாருக்கும் பயனளிக்காதுடெல்லியில் நடைபெற்ற ஜி20 சபாநாயகர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பேச்சு....

'ஆப்ரேசன் அஜய்' மூலம் இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் இன்று தாயகம் திரும்பினர்...மீட்கப்பட்ட 21 தமிழர்கள் சென்னை வருகை...

நாளை நடைபெறும் திமுக மகளிர் உரிமை மாநாடு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் சென்னை வருவதால் தீவிர பாதுகாப்பு

தமிழகத்திற்கு காவிரியில் விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும்...காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரைப்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் இன்று உத்தரவு

சென்னையில் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 4 ஆயிரத்து 400 பேர் பிடிப்பட்டனர்...இன்று ஒரே நாளில் 20 லட்சம் ரூபாய் அபாரதம் வசூலிக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே தகவல்...


Next Story

மேலும் செய்திகள்