நைஜீரியாவில் வெடிகுண்டு விபத்து.. தெறித்து ஓடிய மக்கள்.. 27 பேர் பலி..

x

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் வெடிகுண்டு விபத்தில் 27 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நசரவா மற்றும் பெனியூ மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில் உள்ள ருகுபி என்ற கிராமத்தில் மக்கள் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த போது இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இன மற்றும் மத சண்டைகள் அதிகம் நிகழும் இடத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் 27 பேர் மற்றும் ஏராளமான கால்நடைகள் பலியானதுடன் மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்... ஒருவேளை ராணுவ தாக்குதலால் இந்த வெடிகுண்டு விபத்து நிகழ்ந்திருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அந்நாட்டின் விமானப் படை இது குறித்து பதிலளிக்கவில்லை.

இங்கு மேய்ச்சல் மற்றும் தண்ணீர் தொடர்பாக கால்நடை வளர்ப்பவர்களும் விவசாயிகளும் அடிக்கடி மோதிக் கொள்வர்... பல தசாப்தங்களாக நீடித்த மோதல் சமீபத்திய ஆண்டுகளில் இன மற்றும் மத மோதல்களாக மாறியுள்ளது... பெரும்பாலான மேய்ப்பர்கள் இஸ்லாமியர்கள்...

மேலும் விவசாயிகளில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள்... இந்நிலையில், தற்போதைய குண்டுவெடிப்பிற்கான காரணம் என்னவென்று போலீசார் தீர விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்