பழிவாங்க காத்திருந்த கும்பல் ....போலீஸ் வேட்டையில் சிக்கிய வெடிகுண்டுகள் - அடுத்து நடந்த அதிரடி

x

நெய்வேலியில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், நெய்வேலியில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அகிலன் மற்றும் நந்தா ஆகிய இருவரது வீட்டிலிருந்து போலீசார் 8 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில், முன்விரோதம் காரணமான தாக்குதலுக்கு நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும், இதில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்