புதிய வீடு கட்டுபவர்களுக்கு அடுத்த அதிர்ச்சி...

x

பத்திரப்பதிவுத்துறை சேவை கட்டணம் உயர்வு எதிரொலியால் புதிய வீடுகளின் விலையும் உயர்ந்துள்ளது. இது குறித்து கட்டுமான தொழிலாளர் சங்கத்தினரிடம் விசாரித்த போது கொரோனா பரவலுக்கு பிறகு இப்போது தான் கட்டுமான தொழில் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளதாகவும், பத்திரப்பதிவு துறையின் சேவை கட்டண உயர்வால் வீடுகளின் விலை 3 முதல் 5 சதவீதம் உயரும் என கூறப்பட்டுள்ளது. உதாரணமாக ஒரு கோடி ரூபாய்-க்கு ஒரு புதிய வீடு விற்பனைக்கு வருகிறது என்றால் இனிமேல் ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் என்று அதிகரிக்கும் என்கின்றனர். விலை உயர்வால் கட்டுமான தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும், நேரடியாக புதிய வீடு கட்டும் பயனாளர்களையே இந்த விலை உயர்வு பாதிக்கும் என கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்