கலெக்டர் ஆபீஸ் முன்பு அடுத்து அடுத்து 2 பேர் தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பான நெல்லை

x

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் அடுத்தடுத்து 2 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மன நலன் பாதிக்கப்பட்ட மகளுடன் தனியே வசித்து வருபவர் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த மரிய சிங்கம்... ரேஷன் கார்டு வழங்கக் கோரி தொடர்ந்து 13 ஆண்டுகளாக முறையிட்டும் எந்த பலனும் கிடைக்காத நிலையில், ஆட்சியர் அலுவலக வாயிலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். துரிதமாக செயல்பட்டு காவலர்கள் தடுத்து நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த பதற்றம் தணிவதற்குள்ளாகவே, ஆட்சியர் அலுவலகம் முன்பு, அடுத்த சில நிமிடங்களுக்குள் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரும் தீக்குளிக்க முயன்றார்... அபகரிக்கப்பட்ட தனது நிலத்தை மீட்டுத் தரக் கோரி 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்து மாரியப்பன் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்