இந்தியாவை பந்தாடிய நியூசிலாந்து - தோல்விக்கு இதுதான் காரணமா ..?

x

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.

ஆக்லாந்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் குவித்தது. ஷ்ரேயாஸ் ஐயர், தவான், சுப்மன் கில் அரைசதம் அடித்தனர். வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக ஆடி 37 ரன் அடித்தார். பின்னர் ஆடிய நியூசிலாந்தில் தொடக்க வீரர்கள் கான்வே 24 ரன்னுக்கும், ஆலன் 22 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். டேரில் மிட்செல் சொற்ப ரன்னுக்கு வெளியேற 4வது விக்கெட்டுக்கு கைகோர்த்த வில்லியம்சன்-டாம் லாதம் ஜோடி நிலைத்து நின்று ஆடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லாதம், சதம் விளாசினார். இந்த ஜோடியை இறுதி வரை இந்திய பவுலர்களால் பிரிக்க முடியாமல் போக, 47 புள்ளி 1 ஓவரில் நியூசிலாந்து இலக்கை எட்டியது. லாதம் 145 ரன்னுடனும் வில்லியம்சன் 94 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து 1-க்கு பூஜ்யம் என முன்னிலைப் பெற்று உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்