பகை முடிக்க காத்திருக்கும் நியூசிலாந்து, கோப்பையை தூக்க துடிக்கும் இந்தியா - வெல்லுமா பாண்டியா படை?

x

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது. 2-ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றி தொடரில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், நியூசிலாந்து அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தால் தொடர் டிரா ஆகும் வாய்ப்பு ஏற்படும்.

நியுசிலாந்தில் உள்ள நேப்பியரில் இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்