மெரினா செல்லும் மக்களுக்கு போலீசார் புதிய அப்டேட் - பொங்கல் பண்டிகையால் அதிரடி

x

காணும் பொங்கலை முன்னிட்டு, சென்னை முழுவதும் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணும் பொங்கலை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 11 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எலியட்ஸ் கடற்கரையில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் காணாமல் போனால், உடனடியாக மீட்பதற்காக, அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. மேலும், குற்ற நிகழ்வுகளை கண்காணிக்கும் பொருட்டு, மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரையில், டிரோன் கேமராக்கள் பறக்கவிடப்பட உள்ளன. மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதே போன்று பொதுமக்கள் அதிகம் கூடும் மற்ற முக்கிய இடங்களான கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்