தனியார் கல்லூரிகளுக்கு பாய்ந்த புதிய விதிகள்... அண்ணா பல்கலைக் கழகம் அதிரடி

x

அதன்படி அண்ணா பல்கலைக் கழகத்தின் விதிமுறைகளை கல்லூரிகள் பூர்த்தி செய்ய வேண்டும், மேலும் தடையின்மை சான்றிதழும் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

தொடர் கண்காணிப்பு செய்திடும் வகையிலான விதிமுறைகள் நடப்பாண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது.

தன்னாட்சி பெற கல்லூரிகள் தொடர்ந்து 10 ஆண்டுகள் செயல்பட்டு இருக்க வேண்டும்.

முந்தைய 5 ஆண்டுகளில் முதலாமாண்டு இளங்கலை படிப்பில் 70 சதவீத மாணவர் சேர்க்கை இருப்பது அவசியம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனத்தின் தர குறியீடு 10ல் இருந்து 20ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டு தேர்ச்சி சதவீதம் 70 சதவீதத்திற்கும் மேலாக இருக்க வேண்டும் எனவும், விரிவுரையாளர்களின் சராசரி பணி அனுபவம் 5 ஆண்டுகளாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய துறைகள் தொடங்கப்பட வேண்டும் எனில் பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற வேண்டும் எனவும்,

தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக 10 ஆண்டு அனுபவம் பெற்ற பேராசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும்,

தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் பல்கலைக் கழகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த விதிமுறைகளை பின்பற்றாத தன்னாட்சி கல்லூரிகளுக்கு அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கும் புதிய விதிமுறைகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்