சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி-கொலிஜியம் பரிந்துரை!

x

மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலாவை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜீயம் பரிந்துரை செய்துள்ளது.உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் கூட்டம், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நடைபெற்றது. அதில், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதுபோல, மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலாவை, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கவும் உச்சநீதிமன்ற கொலிஜீயம் பரிந்துரை செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்