தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு புது மருத்துவ கல்லூரி..? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதிய தகவல்

x
  • உதகையில் 600 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவ கல்லூரி வரும் ஜூலை மாதம் திறக்கபடும் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
  • நீலகிரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் அவர் உதகை அரசு மருத்துவக்கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கிகளை வழங்கினார்.
  • அங்கு புதிதாக கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தையும் அவர் திறந்து வைத்தார்.
  • அப்போது அமைச்சர் ராமச்சந்திரன் உடனிருந்தார்.
  • பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவமனைகளில் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கபட்டுள்ளதாக கூறினார்.
  • தமிழகத்தில் மேலும் 6 மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரிகள் கட்ட விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்