பழங்குடியின மக்களுக்கு புது வீடுகள் - அதிரடி ஆய்வில் அமைச்சர்கள்

காஞ்சிபுரத்தில் இருளர் பழங்குடியின மக்களுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமான பணிகளை அமைச்சர்கள் தாமோ அன்பரசன், கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்தனர். காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மலையன்குளம் பகுதியில் நடைபெறும் கட்டுமான பணிகளை, அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜ், தாமோ. அன்பரசன் ஆய்வு செய்தனர். கட்டுமான பொருட்களின் தரம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து கேட்டறிந்த இருவரும், பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com