சபரிமலையில் புதிதாக பசுமை விமான நிலையம்.. அனுமதி வழங்கியது மத்திய விமான போக்குவரத்துத் துறை

x

சபரிமலையில், நான்கு ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய விமான நிலையம் அமைக்க, விமான போக்குவரத்துத் துறை அனுமதி வழங்கியுள்ளது...

கேரளாவில் பிரதித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்தும் வருகை தருகின்றனர். பக்தர்களுக்காக பல்வேறு வசதிகளை செய்து வரும் மாநில அரசு, சபரிமலையில் விமான சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது. எருமேலி செருவள்ளி எஸ்டேட்டில் அரசு, தனியார் பங்களிப்பில் இரண்டு ஆயிரத்து 250 ஏக்கர் பரப்பளவில், நான்கு ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள இந்த விமான நிலையத்திற்கு, ஏற்கனவே பாதுகாப்புத்துறை அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் சபரிமலையில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்