"செல்போனை கண்டுபிடிக்க Whatsapp-ல் Hi அனுப்பினால் போதும்" புகார் அளிக்க புதிய வசதி | Vellore

x

வேலூர் மாவட்டத்தில் செல்போன் தொலைந்துபோனால் வீட்டில் இருந்தபடியே புகார் அளிக்கும் வகையில், வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


வேலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில், செல்போன் தொலைந்து போவதாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. செல்போனை தொலைத்தவர்கள், வீட்டில் இருந்தபடியே புகார் அளிக்கும் வகையில், 'செல் ட்ராக்கர்' என்ற வாட்ஸ்-அப் எண்ணை வேலூர் சரக டிஐஜி முத்துசாமி அறிமுகப்படுத்தினார். அதன்படி, புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஹாய் என்று குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் எனவும், பின்னர் அந்த எண்ணுக்கு கூகுள் படிவம் இணைப்பு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த படிவத்தில் செல்போன் தொலைத்தவர்களின் பெயர், முகவரி, செல்போனின் ஐ.எம்.இ.ஐ எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்தால், அவை நேரடியாக மாவட்ட சைபர் குற்றப்பிரிவுக்கு சென்றுவிடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்