"புதிய கல்விக்கொள்கை நமது வரலாற்றை சிதைக்கிறது" - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

x

புதிய கல்விக்கொள்கை நமது வரலாற்றை சிதைக்கிறது என்பதற்காகவே எதிர்ப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் தும்கூர் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்புவது தேச விரோத செயல் என தெரிவித்துள்ளார்.

அப்படிப்பட்டவர்களுக்கு எதிராக போராடுவோம் என்றும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நிற்கும் சசி தரூரும், மல்லிகார்ஜூன கார்கேவும் திறமை மிக்கவர்கள் என கூறினார்.

இருவருமே காங்கிரஸ் கட்சியின் கைப்பாவையாக செயல்படுவார்கள் என கருதவில்லை என ராகுல் காந்தி தெரிவித்தார். புதிய கல்விக்கொள்கை நமது வரலாற்றை சிதைக்கிறது. நமது கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான பரவலாக்கப்பட்ட கல்வி முறையை விரும்புவதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.Next Story

மேலும் செய்திகள்