6 வாரங்களில் புதிய CEO - அதிரடியாக அறிவித்த மஸ்க்

x

NBCUniversal ஊடக நிறுவனத்தின் விளம்பரத்துறைத் தலைவரான Linda Yaccarinoதான் ட்விட்டரின் அடுத்த CEO என பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. ட்விட்டர் CEO எலான் மஸ்க் தான் ஒரு புதிய தலைமை நிர்வாக அதிகாரியைத் தேர்ந்தெடுத்து விட்டதாகவும், அடுத்த 6 வாரங்களில் அவர் பதவியேற்பார் எனவும் தெரிவித்திருந்த நிலையில், அவர் யாரென்ற தகவலை ரகசியமாக வைத்திருந்தார். இந்நிலையில், அந்தப் பதவிக்கு Linda Yaccarino வரவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளன. Linda Yaccarino கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக NBCUniversal ஊடக நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். அவர் அமெரிக்காவில் உள்ள பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார்... கடந்த மாதம் மியாமியில் நடந்த ஒரு விளம்பர மாநாட்டில் Yaccarino, எலான் மஸ்க்கை பேட்டி கண்டார். அம்மாநாட்டில், மஸ்க்கை கைதட்டல்களுடன் வரவேற்க பார்வையாளர்களை ஊக்குவித்த Yaccarino, மஸ்க்-ஐ வாயாற புகழ்ந்து தள்ளியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்