Ex.-உடன் சேர்த்து வைக்க app.. download செய்த பெண்ணுக்கு climax -ல் காத்திருந்த ஆப்பு

x

பள்ளி படித்த போது உயிருக்கு உயிராக சீனியர் ஒருவரை காதலித்து வந்த இளம்பெண்... ஒரு கட்டத்தில் அவரை பிரிய நேரிட்டுள்ளது. வெளிநாட்டிற்கு சென்றுவிட்ட காதலனின் நினைவுகளால் வாடி வந்துள்ளார், 19 வயதான அந்த இளம் பெண்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு சென்று விட்ட காதலனை எப்படியாவது தேடி கண்டுபிடிக்க வேண்டும் என அலைமோதிய அவரது மனம்... அதற்கு கூகுளின் உதவியை நாடியிருக்கிறது.

இப்படி தூடியாய் துடித்து வந்தவர் கண்ணில் பட்டது தான்... 'ஹவ் டூ பிரிங் பேக் எக்ஸ்' என்ற இணைய செயலி.

உடனடியாக ஆப்பை பதிவிறக்கம் செய்து... தன்னுடைய காதலனை பற்றிய அனைத்து தகவல்களையும் அதில் பதிவிட்டிருக்கிறார், அந்த இளம்பெண்.

அவரை தொடர்பு கொண்ட இளைஞர்கள்.. தங்கள் காதலனை தாங்கள் கண்டுபிடித்து தருவதாக உறுதியளிக்கவே... மீண்டும் தன் காதலனுடன் சேர்ந்தால் போது என காதல் பித்து கொண்டவர்... அதற்காக அதிக செலவாகும் என கூறிய வாலிபர்களின் டிமாண்ட்டிற்கும் அடிப்பணிந்து, 40 சவரன் நகையை கொடுத்துள்ளார்.

இதற்காக சென்னை விமான நிலையத்திற்கு அந்த இளம்பெண்ணை வரவழைத்து, அங்கு அவரை சந்தித்து 40 சவரன் தங்க நகையை வாங்கி சென்றுள்ளனர், பஞ்சாப் இளைஞர்கள்.

ஆனால் அதன் பிறகு தாங்கள் கூறியது போல அந்த இளம்பெண்ணை அவரது காதலனுடன் சேர்த்து வைக்க வில்லை மாறாக மேலும் ஐந்து லட்சம் கொடுக்காவிட்டால் உன்னை பற்றி இணையதளத்தில் அவதூறாக பதிவிடுவோம் என்ற மிரட்டல் தான் வந்திருக்கிறது.

இதை கேட்டு, ஆடிப்போன இளம்பெண்... சுதாரித்து கொண்டு, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் அறிவுறுத்தியதன் படி, அந்த இளைஞர்களை அந்த இளம்பெண் மீண்டும் தொடர்பு கொண்டு, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வரவழைத்ததும்... மாறுவேடத்தில் நின்றிருந்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்த அனில்குமார் என்பதும் தரன் பகுதியை சேர்ந்த ககந்தீப் பார்கவ் என்பதும் தெரியவந்தது.

இவர்களின் மோசடி வலையில் பலமுறை பல இளைஞர்கள் சிக்கி இருப்பதும்.. அவர்களிடம் இவர்கள் பல லட்சம் மோசடி செய்திருப்பதும்.. திடுக்கிடும் தகவல்களாக வெளிவந்துள்ளன.

இப்படி காதல் பித்து கொண்டு கண்மூடி தனமாக ஏமாறுபவர் களை என்னவென்று சொல்வது?


Next Story

மேலும் செய்திகள்