உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது நெதர்லாந்து

இந்தியாவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் விளையாட நெதர்லாந்து அணி தகுதிபெற்றது.

புலவாயோவில் நடைபெற்ற உலகக்கோப்பை தகுதிச்சுற்றின் சூப்பர் சிக்ஸ் பிரிவில், ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து 50 ஓவர்களில் 277 ரன்கள் சேர்த்தது. அடுத்து பேட் செய்த நெதர்லாந்து 6 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டிய நிலையில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் சூப்பர் சிக்ஸ் பிரிவில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளை பெற்ற நெதர்லாந்து அணி, இலங்கையை தொடர்ந்து பத்தாவது அணியாக, 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெற்றது.

X

Thanthi TV
www.thanthitv.com