கால்பந்து உலகக்கோப்பை தொடர் செனகலை சாய்த்தது நெதர்லாந்து...

x

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

2வது பாதியில் கோல் அடிக்க இரு அணியினரும் கடுமையாக முயற்சித்த நிலையில், ஆட்டத்தின் 84வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கேக்போ கோல் அடித்தார்.

தொடர்ந்து கூடுதல் நேரத்தில் நெதர்லாந்து வீரர் கிளாசன் ஒரு கோல் அடித்தார்.

எவ்வளவோ போராடியும் செனகலால் கோல் அடிக்க முடியாமல் போக, ஆட்ட நேர முடிவில் 2க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்