"எனக்கு எண்டே இல்ல" - 6வது முறையாக இஸ்ரேல் பிரதமரானார் நெதன்யாஹு | Benjamin Netanyahu

x

இஸ்ரேல் பிரதமராக 6வது முறையாக பதவியேற்றுள்ள பெஞ்சமின் நெதன்யாஹு, அந்நாட்டின் மிக நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார்... 4 ஆண்டுகளில் இஸ்ரேலில் கடந்த நவம்பர் மாதம் 5வது பொதுத் தேர்தல் நடைபெற்றது... நெதன்யாகுவின் கட்சி 32 இடங்களைக் கைப்பற்றியது. கூட்டணி கட்சிகளோடு இணைந்து நெதன்யாஹு ஆட்சி அமைத்தார்... இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 120 உறுப்பினர்களில் 63 பேர் அரசாங்கத்திற்கு ஆதரவாகவும், 54 பேர் எதிராகவும் வாக்களித்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று இஸ்ரேல் பிரதமராக 6வது முறையாக நெதன்யாஹு பதவியேற்றுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்