நெல்லையப்பர் கோயிலில் கார்த்திகை திருவிழா - விமரிசையாக நடைபெற்ற பரணி தீபம் நிகழ்ச்சி

x

நெல்லையப்பர் கோயிலில் கார்த்திகை திருவிழா - விமரிசையாக நடைபெற்ற பரணி தீபம் நிகழ்ச்சி

நெல்லை நெல்லையப்பர் கோயிலில், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. நெல்லை நெல்லையப்பர் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியுள்ளது.

திருவிழாவின் தொடக்க நிகழ்வான பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி, மகா மண்டபத்தில் நடைபெற்றது. நெல்லையப்பர் மூலஸ்தானத்தில் இருந்து சுடர் எடுத்துவரப்பட்டு, பரணி தீபம் ஏற்றப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, பரணி தீபத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்