TNPL Finalஇல் கோவையுடன் மோதும் நெல்லை...

டி.என்.பி.எல் தொடரின் குவாலிபையர் சுற்றில் நெல்லை மற்றும் திண்டுக்கல் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த திண்டுக்கல் அணி, 185 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய நெல்லை அணியில், அஜிதேஷ் 73 ரன்கள் எடுத்தார். கடைசி 2 ஓவர்களில் நெல்லை அணி வெற்றி பெற 37 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19வது ஓவரில் ரித்திக் ஈஸ்வரன் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம் 20 ஒவர்களில் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நெல்லை அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளைய தினம் நடைபெறும் இறுதி போட்டியில் நெல்லை அணி, கோவை அணியை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com