மெதுவாக உள்ளே நுழைந்த திருடன் - ஓட ஓட துரத்திய ஊர் மக்கள் | பரபரப்பு சிசிடிவி காட்சி | ThanthiTV

x

நெல்லையில் பூட்டிய வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையனை சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் துரத்தி சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பாகியுள்ளது.

நெல்லை மாநகர் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் ராஜி. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணி புரிந்து வரும் நிலையில், தீபாவளியை முன்னிட்டு சேலத்தில் உள்ள தன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதையறிந்து ராஜியின் வீட்டில் புகுந்த மர்ம நபர் திருட்டில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்து அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதையடுத்து திருடன் தப்பியோடியுள்ளார். தப்பியோடிய திருடனை சிறுவர்கள் உட்பட பொது மக்கள் துரத்தும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்