மர்மகும்பலின் மிரட்டல் செயல்.. வீட்டிற்குள் புகுந்து குடும்பத்தினரை கட்டி வைத்து கொள்ளை.. பீதியில் நெல்லை மக்கள்

மர்மகும்பலின் மிரட்டல் செயல்.. வீட்டிற்குள் புகுந்து குடும்பத்தினரை கட்டி வைத்து கொள்ளை.. பீதியில் நெல்லை மக்கள்
Published on

நெல்லையில் குடும்பத்தினரை கட்டி வைத்து 50 சவரன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதாக கூறப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை ஜான்சி ராணி நகரை சேர்ந்தவர் அரசு போக்குவரத்து கழக நடத்துநர் ராமசாமி.

இவர் தன் மகன் மற்றும் மகளுடன் இருக்கும் போது மர்மகும்பல் வீட்டினுள் புகுந்ததாகவும், மூவரினையும் கட்டி வைத்து வீட்டில் இருந்த 50 சவரன் நகைகளை திருடி சென்றதாகவும் கூறப்படுகிறது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com